தில்லிக்கு நிகராக சென்னையில் வாகனங்கள் ஏற்படுத்தும் காற்றுமாசு: ஆய்வில் தகவல்
தில்லியில் ஏற்படும் காற்றுமாசு குறித்து அறிந்து மனதுக்குள் கவலைப்படுவீர்களானால், மற்றொரு செய்தி உங்களை மேலும் கவலைக் கொள்ளச்செய்யலாம்.
ஆல்வார்: தில்லியில் ஏற்படும் காற்றுமாசு குறித்து அறிந்து மனதுக்குள் கவலைப்படுவீர்களானால், மற்றொரு செய்தி உங்களை மேலும் கவலைக் கொள்ளச்செய்யலாம்.
அதாவது, சென்னையில் இயக்கப்படும் வாகனங்களும் தில்லி அளவுக்கு காற்றுமாசை ஏற்படுத்துகின்றன என்பதுதான் அது.
இந்தியாவில் தில்லிக்கு அடுத்தபடியாக, வாகனங்களால் காற்றுமாசு ஏற்படும் நகரங்களின் பட்டியலில் சென்னைதான் உள்ளது. சென்னையில் ஒவ்வொரு நாளும் வாகனங்களால் 3,200 டன்கள் கார்பன் டையாக்ஸைட் (CO2) உற்பத்தியாவதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் தெரிவித்துள்ளது.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் ஆராய்ச்சி அமைப்பு வௌயிட்ட ஆய்வு முடிவில், கார்பன் டையாக்ஸைட் மட்டுமல்லாமல், சென்னையில் நாள்தோறும் 1000 கிலோ கிராம் அளவுக்கு காற்றில் மாசு கலப்பதாகவும், 12,000 கிலோ கிராம் அளவுக்கு நைட்ரோஜன் டையாக்ஸைட் கலப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.