தில்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!
வடகிழக்கு தில்லியில் பஜன்புரா பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு தில்லியில் பஜன்புரா பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
தில்லி பஜன்புரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து உடல் அழுகிய துர்நாற்றம் வந்துள்ளது. இதனை உணர்ந்த அப்பகுதி மக்கள் இன்று காலை 11.30 மணிக்கு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, உடனடியாக போலீஸார் அவ்விடத்திற்கு விரைந்து, பூட்டியிருந்த வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மூன்று குழந்தைகள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். அவர்கள் அனைவருமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்(ஒரு தம்பதியர் மற்றும் அவர்களது 3 குழந்தைகள்) என்பதையும் போலீஸார் உறுதி செய்துள்ளனர். உடல்கள் அனைத்தும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் 4-5 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், உடல்கள் பல நாட்களுக்குள் வீட்டிற்குள் கிடந்ததாகவும் தெரிகிறது.
இந்த சம்பவம் தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா என்பது போலீஸாரின் விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும்.