இந்தியா

உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

UNI


புது தில்லி: மாநிலங்களவை உறுப்பினராகத் தான் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டால், தனது வாதத்தைக் கேட்காமல் அதன் மீது உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டால், அதன் மீது தனது வாதத்தையோ அல்லது கருத்தையோ கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று கேவியட் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை உறுப்பினராக ஜெய்சங்கர் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் கௌரவ் பாண்டியா தாக்கல் செய்த மனு, பிப்ரவரி 4ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT