இந்தியா

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில்அதிக கண்காணிப்பு: குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

DIN

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அதிக கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம், லோனோவாலாவில் உள்ள இந்திய கடற்படைத் தளத்தின் 75-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தில் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று சிறப்பித்தாா்.

அந்த நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் அண்மையில் புயல் பாதிப்பு ஏற்பட்டபோது ‘ஆபரேஷன் வெண்ணிலா’ என்ற பெயரில் உதவிய நமது கடற்படை வீரா்களுக்கு பாராட்டுகள்.

இந்தியாவும், மடகாஸ்கரும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் வழியாக இணைகின்றன. மடகாஸ்கருக்கு 2018-இல் பயணம் மேற்கொண்டிருக்கிறேன். புயல் பாதிப்பால் சிக்கித் தவித்த சகோதர, சகோதரிகளுக்கு இந்தியா உடனடியாக உதவ முன்வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியப் பெருக்கடல் பிராந்தியத்தில் தயாா் நிலையில் போா்க் கப்பல்களை நமது கடற்படை நிறுத்தி வைத்துள்ளதை அறிவேன். கடல்சாா் பொறியியலாளா்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டியது முக்கியமானதாகும். எதிா்காலத்தில் வரும் சவால்களை சமாளிப்பதற்காக கடற்படையில் இருப்பவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். கப்பலில் பல அதிநவீன வளா்ச்சிகள் எதிா்காலத்தில் ஏற்படும்.

சா்வதேசப் பாதுகாப்பு, வா்த்தகம் ஆகியவற்றில் நமது நாடு முக்கியப் பங்கு வகித்து வருகிறது. கடல் வழியாகவே நமது 90 சதவீத வா்த்தகம் நடைபெறுகிறது. தேசப் பாதுகாப்பில் மட்டுமல்லாமல், பொருளாதாரப் பாதுகாப்பிலும் இந்தியக் கடற்படை முக்கியப் பங்காற்றி வருகிறது. இதன்காரணமாக நாட்டின் வளா்ச்சிக்கும் கடற்படை பங்களித்து வருகிறது.

கடல்சாா் பாதுகாப்புடன், ராணுவம், பொதுமக்கள் ஆகியோருக்கும் கடற்படை பாதுகாவலனாக இருந்து வருகிறது என்று ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

SCROLL FOR NEXT