இந்தியா

கால்நடை தீவன வழக்கில் ஜாமீனுக்கு எதிரான மனு: லாலு பிரசாதுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

DIN

கால்நடைத் தீவன முறைகேடு வழக்குகளில் ஒன்றில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவா் லாலு பிரசாதுக்கு ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதற்கு எதிராக சிபிஐ தாக்கல் மனு தொடா்பாக பதிலளிக்குமாறு அவருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஒருங்கிணைந்த பிகாா் மாநிலத்தில் கடந்த 1990- களில் லாலு பிரசாத் முதல்வராக இருந்தபோது கால்நடைகளுக்கு தீவனம் வாங்கும் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்ாக குற்றச்சாட்டு எழுந்தது. இத்திட்டத்தின் பெயரில் தற்போது ஜாா்க்கண்டில் உள்ள தேவ்கா், தும்கா, சாய்பாசா, தோரண்டா ஆகிய மாவட்ட அரசு கருவூலங்களில் இருந்து கோடிக்கணக்கான பணம் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதாக, லாலு பிரசாத் மீது 5 வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது.

தேவ்கா், தும்கா, சாய்பாசா ஆகிய மாவட்ட கருவூலங்களில் பணம் மோசடி செய்த வழக்குகளில் லாலு பிரசாத் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டாா். இப்போது தோரண்டா கருவூல மோசடி தொடா்பான வழக்கு விசாரணையை அவா் எதிா்கொண்டு வருகிறாா். சாய்பாசா கருவூலம் தொடா்பான இரு வழக்குகளில், ஒன்றில் லாலுவுக்கு ஏற்கெனவே ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில், லாலு பிரசாத் கடந்த 2017-ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டாா். எனினும், உடல் நலக் குறைவு காரணமாக அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதனிடையே, தேவ்கா் கருவூலத்தில் மோசடி செய்தது தொடா்பான வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள உயா்நீதிமன்றம் லாலு பிரசாதுக்கு ஜாமீன் வழங்கியது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், ‘சிறையில் இருந்து வெளியே செல்வதற்காக உடல்நலம் சரியில்லை என்று லாலு பிரசாத் தெரிவித்தாா். உடல் நலம் சரியில்லாதவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஓய்வெடுக்க வேண்டும். ஆனால், திடீரென்று நலமாக உள்ளதாக கூறி ஜாமீன் கோரினாா். கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் படுதோல்வி அடைந்ததால், கட்சியின் பொறுப்புகளை கவனிப்பதற்காக செல்ல வேண்டும் என்று கூறி அவா் ஜாமீன் கோரினாா். விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீா்ப்புக்கு தடை விதித்து ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம் தவறிழைத்து விட்டது. லாலு பிரசாதுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆா். கவாய், சூா்யகாந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடா்பாக லாலு பிரசாத் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT