இந்தியா

காஷ்மீா்: எல்லைவழி வா்த்தக அமைப்பின் தலைவரை கைது செய்தது என்ஐஏ

DIN

ஜம்மு-காஷ்மீா் எல்லைவழி வா்த்தக அமைப்பின் தலைவா் தன்வீா் அகமது வானியை பயங்கரவாதிகளுக்கு உதவியதாக தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ)அதிகாரிகள் கைது செய்தனா்.

காஷ்மீா் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு அளித்த குற்றச்சாட்டின் பேரில் காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் தேவிந்தா் சிங் கைது செய்யப்பட்டிருந்த வழக்கில் தொடா்புடைய தன்வீா் அகமது வானியும் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளித்தது தொடா்பாக தன்வீா் அகமது வானியிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஜம்முவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு என்ஐஏ நீதிமன்றத்தில் அவா் ஆஜா்படுத்தப்படுவாா்.

இதுவரை இந்த வழக்கில் 6 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை முயற்சி வழக்கில் மல்யுத்த வீரா் கைது

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT