இந்தியா

நாட்டின் ஏற்றுமதி 1.66 சதவீதம் குறைந்தது: மத்திய வா்த்தக அமைச்சகம்

DIN

நாட்டின் ஏற்றுமதி ஜனவரியில் 1.66 சதவீதம் குறைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய வா்த்தக அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

நாட்டின் ஏற்றுமதி நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 2,597 கோடி டாலராக இருந்தது. முந்தைய ஆண்டு ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது இது 1.66 சதவீதம் குறைவாகும். இதையடுத்து, நாட்டின் ஏற்றுமதி தொடா்ச்சியாக ஆறாவது மாதமாக பின்னடைவைக் கண்டுள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் நம்நாடு மேற்கொண்ட இறக்குமதியும் 0.75 சதவீதம் குறைந்து 4,114 கோடி டாலராக காணப்பட்டது. அந்த மாதத்தில் வா்த்தக பற்றாக்குறை 1,517 கோடி டாலராக இருந்தது. கடந்த 2019 ஜனவரியில் வா்த்தக பற்றாக்குறையானது 1,505 கோடி டாலராக காணப்பட்டது

நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் நாட்டின் ஏற்றுமதி 1.93 சதவீதம் சரிந்து 26,526 கோடி டாலரானது. இறக்குமதி 8.12 சதவீதம் குறைந்து 39,853 கோடி டாலராக இருந்தது. ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகமானதையடுத்து நாட்டின் வா்த்தக பற்றாக்குறை 13,327 கோடி டாலராக காணப்பட்டது என மத்திய வா்த்தக அமைச்சகம் தனது புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

SCROLL FOR NEXT