பஞ்சாப்பில் பள்ளி வேன் தீப்பிடித்ததில் 4 சிறுவர்கள் பலி
தனியார் பள்ளியின் வேனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், 4 சிறுவர்கள் பலியாகினர்.
சண்டிகர்: தனியார் பள்ளியின் வேனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், 4 சிறுவர்கள் பலியாகினர்.
பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டம் லாங்கோவால் நகரில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் வேனில் திடீரென தீப்பிடித்தது. அப்போது வேனில் 12 மாணவர்கள் இருந்தனர்.
வேனில் தீப்பிடித்ததும், ஓட்டுநர் தப்பியோடினார். பொதுமக்கள், வேனில் இருந்த 8 சிறுவர்களை மீட்டனர். ஆனால், 4 முதல் 6 வயதுடைய நான்கு சிறுவர்கள் தீவிபத்தில் சிக்கி பலியாகினர்.