இந்தியா

தயாநிதி மாறன் மீது வழக்குத் தொடர தமிழக அரசு ஒப்புதல்!

திமுக எம்.பி. தயாநிதி மாறன் மீது அமைச்சர் ஜெயக்குமார் வழக்குத் தொடர தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

DIN

திமுக எம்.பி. தயாநிதி மாறன் மீது அமைச்சர் ஜெயக்குமார் வழக்கு தொடர தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது பொதுமக்கள் மற்றும் தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முறைகேடு குறித்து சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்கிடையே இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக எம்.பி. தயாநிதி மாறன், 'அமைச்சர் ஜெயக்குமாருக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். பல தடைகளைத் தாண்டி படித்துவரும் மாணவர்களின் கனவுகளை அரசு கேலிக்கூத்தாகி வருகிறது' என்று தெரிவித்தார். 

தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார், 'அரசியல் ஆதாயம் பெறுவதற்காக பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி வருவதாகத் தெரிவித்தார். மேலும், இதற்காக தயாநிதிமாறன் மீது வழக்குத் தொடரப்படும் என்று தெரிவித்திருந்தார். 

அதன்படி, டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார், தயாநிதி மாறன் மீது வழக்குத் தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வா வாத்தியார் வெளியீட்டுத் தேதி!

லாட்டரி பரிசு விழுந்ததாக மோசடி! ஏமாறுபவர்களே இலக்கு.. எச்சரிக்கை!!

சபரிமலை விவகாரம்: தேவஸ்வம் அமைச்சரை ராஜிநாமா செய்யக் கோரி கேரள பேரவையில் அமளி!

ஆஷஸ் தொடரில் இருந்து கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகல்?! ஆஸி.க்கு பின்னடைவா?

ராமதாஸிடம் நலம் விசாரித்த திருமாவளவன்!

SCROLL FOR NEXT