இந்தியா

முதல்வர் எடியூரப்பா பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறார்

தினமணி

முதல்வர் எடியூரப்பா பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறார் என முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா குற்றம்சாட்டியுள்ளார்.
 இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கர்நாடகத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி மேலும் 3 ஆண்டுகள் நடைபெறுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால், எடியூரப்பா பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
 குறிப்பாக, குமாரசாமி முதல்வராகப் பதவி வகித்தபோது தொடங்கிய வளர்ச்சிப் பணிகளை ரத்து செய்து வருவதைக் கூறலாம். இது தொடர்பாக, சட்டப் பேரவைக்குள்ளும் வெளியேயும் போராட்டம் நடத்தப்படும். மேலும், மஜத கட்சியைச் சேர்ந்த மாவட்ட உறுப்பினர்கள் துப்பாக்கிமுனையில் மிரட்டப்பட்டுள்ளனர். கட்சியைப் பலப்படுத்தும் மஜதவினரை முதல்வர் எடியூரப்பா போலீஸாரைப் பயன்படுத்தி மிரட்டி வருகிறார்.
 காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சியில் முதல்வராவதற்கு குமாரசாமிக்கு விருப்பமில்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அசோக் கெலோட் உள்ளிட்டவர்கள் எங்களின் இல்லத்துக்கு வந்து, சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் குமாரசாமி முதல்வர் ஆக வேண்டும் என ஆசைப்படுவதாகத் தெரிவித்தனர். முதலில் நாங்கள் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இருப்பினும், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக, குமாரசாமி முதல்வராக ஒப்புக் கொண்டார். காரணம் காங்கிரஸ் மீது எனக்கிருந்த அனுதாபம்தான்.
 காங்கிரஸ் இல்லாத பாரதம் என்று பிரதமர் மோடி கூறி வருகிறார். அது சாத்தியமில்லை. மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமைச் செயலகம் படத்தின் டீசர்

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

SCROLL FOR NEXT