எம்.எல்.ஏ. சுரேந்தர் சிங் 
இந்தியா

வருவாய் ஆய்வாளரைத் தாக்கிய எம்.எல்.ஏ. மகன் மீது வழக்குப்பதிவு

உத்தரப்பிரதேச மாநிலம் பலிலா மாவட்டத்தில் பணியில் இருந்த வருவாய் ஆய்வாளரைத் தாக்கிய பாஜக எம்.எல்.ஏ. மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.   

ANI

பலிலா: உத்தரப்பிரதேச மாநிலம் பலிலா மாவட்டத்தில் பணியில் இருந்த வருவாய் ஆய்வாளரைத் தாக்கிய பாஜக எம்.எல்.ஏ. மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.   

உத்தரப்பிரதேச மாநிலம் பலிலா மாவட்டத்தில் ராதேஷ்யாம் என்பவர் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். அவரிடம் பகுதி அலுவலர் ஒருவரை பணியிட மாற்றம் செய்வது தொடர்பாக  தொகுதி  எம்.எல்.ஏ. சுரேந்தர் சிங்கின் மகன் ஹசாரி சிங் கோரிக்கை வைத்துள்ளார்.  அதனைச் செய்ய முடியாது என்று ராதேஷ்யாம் மறுத்த நிலையில் இருவருக்குமிடையேய் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது  ஹசாரி சிங் வருவாய் ஆய்வாளரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தனக்கு மூக்கு மற்றும் முதுகுப் பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாக ராதேஷ்யாம் அளித்த புகாரின் பேரில்  இந்திய தண்டனைச்  சட்டப் பிரிவுகள் 147 மற்றும் 323 உள்ளிட்ட பிரிவுகளிலும், வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளின் கீழும் ஹசாரி சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் யாதவ் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஹசாரி சிங், நிகில் சிங் மற்றும் மணிபூஷன் ஆகிய மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது' என்று தெரிவித்துள்ளார்.     

அதேசமயம் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஹசாரி சிங் மறுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடலுக்கு விஜய் அஞ்சலி!

இஸ்ரேலில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்

சமீரா, தீக்‌ஷனா பந்துவீச்சில் அசத்தல்..! சான்ட்னர் அதிரடியால் இலங்கைக்கு 169 ரன்கள் இலக்கு!

5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த IndiGo பயணிகள்! பணியாளர்களுடன் வாக்குவாதம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மே.இ.தீவுகள் சிக்ஸர் மழை பொழியுமா? பயிற்சியாளர் பதில்!

SCROLL FOR NEXT