இந்தியா

பறக்க முடியாத புறா - நடக்க முடியாத நாய்க்குட்டி.. நட்பால் இணைந்த கதை

DIN


புது தில்லி: பறக்க முடியாத புறாவும், நடக்க முடியாத நாய்க்குட்டியும் நட்பால் இணைந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

லாப நோக்கற்ற அமைப்பான மியா அறக்கட்டளை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட இந்த புகைப்படத்தில், இங்கு ஒரு புதிய நட்பு உருவாகி வருகிறது. ஹார்மென் மற்றும் லூண்டி என்று பதிவிடப்பட்டிருந்தது.

உடல் ஊனமுற்ற பறவைகள் மற்றும் விலங்குகளை எடுத்து பராமரித்துவரும் மியா அறக்கட்டளை வெளியிட்ட இந்தப் புகைப்படம், உலக மக்கள் பலராலும் விரும்பப்பட்டு மிகப்பெரிய சாதனையையும் படைத்துள்ளது.

இது குறித்தும் மியா அறக்கட்டளை ஒரு தகவலை தெரிவித்துள்ளது. இந்த புகைப்படம் பதிவிட்ட 24 மணி நேரத்தில் 50 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.  எங்கள் சின்னஞ்சிறு தோழர்கள் பற்றிய கதை உலகம் முழுவதும் பரவிவிட்டது என்றும் கூறியுள்ளது.

இந்த நட்பை வரவேற்றும் பாராட்டியும் தொடர்ந்து கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக மூத்த நிா்வாகிகளுடன் முதல்வா் ஸ்டாலின் ஆலோசனை

சில ஊரக உள்ளாட்சி பகுதிகளை அருகிலுள்ள மாநகராட்சிகளுடன் இணைத்த பிறகு தோ்தல்: தமிழக அரசு தீவிர ஆலோசனை

கொடைக்கானலில் காா் மீது லாரி மோதியதில் மூவா் காயம்

பழனி கிரிவீதியில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

‘தலசீமியா’ நோயால் பாதித்த இரு குழந்தைகளுக்கு மருத்துவ மாணவா்கள் ரத்த தானம்

SCROLL FOR NEXT