முகப்பு
இந்தியா

பேரவைக்குள் பத்திரிகையாளர்களுக்குத் தடை விதித்த பேரவைத் தலைவர்

கர்நாடக சட்டப்பேரவைக்குள் பத்திரிகையாளர்கள் நுழைய தடை விதித்து பேரவைத் தலைவர் விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரி உத்தரவிட்டார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:56 PM
பகிர்:

கர்நாடக சட்டப்பேரவைக்குள் பத்திரிகையாளர்கள் நுழைய தடை விதித்து பேரவைத் தலைவர் விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரி உத்தரவிட்டார். இதுதொடர்பாக பிப். 18ஆம் தேதி வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்,

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது அனைத்து தொகுதிகளையும் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள். பேரவைத் தொடரின் போது இங்கு தங்கியிருப்பது எம்எல்ஏக்களின் தனிப்பட்ட நேரமாகும். ஆனால், பத்திரிகையாளர்கள் பேரவைக்குள் வருவதன் மூலம் உறுப்பினர்களின் தனிப்பட்ட நேரம் பாதிக்கப்படுகிறது. 

எனவே, பேரவைக்குள் பத்திரிகையாளர்கள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. எம்எல்ஏக்கள் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் விதமாக பேரவையின் வெளியே ஒரு பகுதி ஏற்பாடு செய்து தரப்படும் என்று அனைத்து ஊடகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →