இந்தியா

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தில்லியில் தொடரும் போராட்டம்; ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

DIN

தில்லி ஜாஃப்ராபாத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்  ஜஃப்ராபாத் மெட்ரோ நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய போராட்டம் தொடர்ந்து வருகிறது. 

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதீயில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை ஜஃப்ராபாத் சாலையில் இருந்து ராஜ்காட் வரை மேற்கொள்ளப்படவிருந்த போராட்டக்காரர்களின் நடை பயணத்திற்கு தில்லி போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT