முகப்பு
இந்தியா

தில்லிக்குப் போய் நிலைமையைக் கட்டுப்படுத்துங்கள்: உள்துறை இணையமைச்சருக்கு ஒவைஸி பதில்

மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷண்ரெட்டி தில்லிக்குப் போய் நிலைமையைக் கட்டுப்படுத்த வேண்டும் என ஒவைஸி தெரிவித்துள்ளார்.

Updated On : 25 பிப்ரவரி, 2020 at 4:52 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:29 PM


மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷண்ரெட்டி தில்லிக்குப் போய் நிலைமையைக் கட்டுப்படுத்த வேண்டும் என ஒவைஸி தெரிவித்துள்ளார்.

தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரானவர்கள் மற்றும் ஆதரவானவர்கள் இடையிலான மோதல் வன்முறையில் முடிவடைந்தது. இதன் காரணமாக இதுவரை 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறையின்போது தில்லி காவல் துறையினர் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட வன்முறையாளர்கள் பக்கம் நின்றதாக அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் ஹைதராபாத்தில் இன்று (செவ்வாய்கிழமை) பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷண்ரெட்டி, "அவர் பொறுப்பற்ற முறையில் கருத்து தெரிவித்துள்ளார். இதுபோன்ற வன்முறையைத் தூண்டும் வகையிலான கருத்தை அவர் கடந்த காலங்களிலும் வெளிப்படுத்தியுள்ளார்" என்றார்.

Advertisement

இந்நிலையில், கிஷண்ரெட்டி விமரிசனம் குறித்து அசாதுதீன் ஒவைஸி தெரிவிக்கையில்,

"அவர் ஏன் ஹைதராபாத்தில் இருக்கிறார்? அவர் தில்லிக்குத் திரும்ப வேண்டும். அவர் மத்திய உள்துறை இணை அமைச்சர். அவர் தில்லிக்குச் சென்று நிலைமையைக் கட்டுப்படுத்த வேண்டும். அங்கு பற்றி எரியும் நெருப்பை அணைக்க வேண்டும். ஏற்கெனவே 7 பேர் உயிரிழந்துள்ளனர்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.