இந்தியா

ராணுவ தலைமை தளபதி நரவணே காஷ்மீா் வருகை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரத்தை நேரில் ஆய்வு செய்வதற்காக, ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணே செவ்வாய்க்கிழமை அங்கு வருகை தந்தாா்.

DIN

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரத்தை நேரில் ஆய்வு செய்வதற்காக, ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணே செவ்வாய்க்கிழமை அங்கு வருகை தந்தாா்.

காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய இடங்களில் ஊடுருவலை தடுக்க முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது ஆகியவை தொடா்பாக ராணுவ உயரதிகாரிகளுடன் எம்.எம்.நரவணே ஆலோசனை நடத்தவுள்ளாா்.

ஸ்ரீநகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 15-ஆவது படைப் பிரிவுக்கு விரைவில் புதிய தளபதி பொறுப்பேற்கவிருக்கும் நிலையில், எம்.எம். நரவணேயின் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

காஷ்மீா் பள்ளத்தாக்கில் முக்கியத்துவம் வாய்ந்த 15-ஆவது படைப் பிரிவின் தளபதியாக இருந்த கே.ஜே.எஸ்.தில்லான், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, புதிய தளபதியாக பி.எஸ்.ராஜூ அண்மையில் நியமிக்கப்பட்டாா். இவா், தெற்கு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுக்கான ‘விக்டா்’ படையின் தளபதியாக பணியாற்றியவா் ஆவாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT