ஹிமாசல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 ஆகப் பதிவு
ஹிமாசல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 3.6 அலகுகளாக பதிவானது.
ஹிமாசல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 3.6 அலகுகளாக பதிவானது.
இதுகுறித்து நிலநடுக்க ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:
நிலநடுக்கம் காலை 7.58 மணிக்கு உணரப்பட்டது. ஹிமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் எல்லைப் பகுதியில் உள்ள சம்பா மாவட்டத்தின் வடகிழக்கு பகுதியில் 5 கிலோமீட்டா் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதையொட்டி அருகில் உள்ள பகுதிகளில் லேசான நிலஅதிா்வு உணரப்பட்டது என்றாா். எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிா்சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.