முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் கால்வாயில் கார் விழுந்து விபத்து: தண்ணீரில் மூழ்கி 3 பேர் பலி 

தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் கார் ஒன்று கால்வாயில் மோதி விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். 

Updated On : 27 பிப்ரவரி, 2020 at 4:11 PM
பகிர்:

ஹைதராபாத்: தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் கார் ஒன்று கால்வாயில் மோதி விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். 

நல்கொண்டா, துகியாலா கிராமத்திற்கு அருகே சென்றுகொண்டிருந்த கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள பி.எம்.ஆர்.பி கால்வாயில் விழுந்துள்ளது. இதில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

இறந்தவர்கள் ஒர்சு ரகு, அவரது மனைவி அலிவேலு மற்றும் அவர்களின் மகள் கீர்த்தி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் மகன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 

Advertisement

இதுகுறித்து அப்பகுதியில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.