முகப்பு
இந்தியா

புத்தாண்டை ஒட்டி கடைசி இரண்டு நாட்களில் தெலங்கானாவில் மது விற்பனை எவ்வளவு தெரியுமா?

புத்தாண்டை  ஒட்டி கடைசி இரண்டு நாட்களில் மட்டும் தெலங்கானாவில் மிக அதிக அளவில் மது விற்பனை ஆகியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:18 PM
மது விற்பனை
பகிர்:

ஹைதராபாத்: புத்தாண்டை  ஒட்டி கடைசி இரண்டு நாட்களில் மட்டும் தெலங்கானாவில் மிக அதிக அளவில் மது விற்பனை ஆகியுள்ளது. 

புத்தாண்டுக் கொண்டாடத்தின் ஒரு பகுதியாக, 2019-ஆம் ஆண்டின் கடைசி இரு நாட்களாகிய டிசம்பர் 30 மற்றும் 31 ஆகிய இரு நாட்களில் மட்டும் தெலங்கானாவில் ரூ. 380 கோடிக்கு  மது விற்பனை ஆகியுள்ளது. 

சராசரியாக ஒரு நாளைக்கு ரூ. 60 கோடி மட்டுமே விற்பனை ஆகக் கூடிய நிலையில், இது மிக அதிக அளவாகக்  காணப்படுகிறது.

ஹைதராபாத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ரங்கா ரெட்டி மற்றும் மெட்கல் மாவட்டங்களில்தான் அதிக அளவு விற்பனையாகியுள்ளது.

இந்தத் தகவலை மாநில கலால் துறை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.