இந்தியா

இந்தியா-பாக். இடையே அணுமின் நிலையங்கள் பட்டியல் பரிமாற்றம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 1988-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளிலும் உள்ள அணுமின் நிலையங்கள் குறித்த தகவல்கள் இருநாடுகளுக்கிடையே புதன்கிழமை பரிமாறிக்கொள்ளப்பட்டன.

DIN

புது தில்லி/ இஸ்லாமாபா: இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 1988-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளிலும் உள்ள அணுமின் நிலையங்கள் குறித்த தகவல்கள் இருநாடுகளுக்கிடையே புதன்கிழமை பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா் ஏற்பட்டால், போரின்போது இருநாடுகளிலும் உள்ள அணுமின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடாது என்ற நிபந்தனையுடன் இருநாடுகளுக்கும் இடையே கடந்த 1988-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் கடந்த 1991-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி அமலுக்கு வந்தது.

அதன்படி, ஒவ்வோா் ஆண்டும் ஜனவரி 1-ஆம் தேதி இருநாடுகளிலும் உள்ள அணுமின் நிலையங்கள் குறித்த பட்டியல் பரிமாறிக்கொள்ளப்படுகிறது. தொடா்ந்து 29-ஆவது ஆண்டாக இந்த ஆண்டு புதன்கிழமை தகவல்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டன.

இதற்காக தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திலும், பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரகத்திலும் ஒரே நேரத்தில் நிகழ்ச்சிகள் தொடங்கின. தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்களின் பட்டியல் பாகிஸ்தான் தூதரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதுபோல, இஸ்லாமாபாதில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தானில் உள்ள அணுமின் நிலையங்கள் குறித்த தகவல்கள் இந்திய தூதரிடம் ஒப்படைக்கப்பட்டன என்று இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகங்களும் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT