இந்தியா

குடியரசு தின அணிவகுப்பு: மேற்கு வங்கம், மகாராஷ்டிரத்தை தொடர்ந்து பிகார் நீக்கம்

தலைநகர் தில்லியில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சியில் மேற்கு வங்கம், மகாராஷ்டிர மாநிலங்களைத் தொடர்ந்து பிகார் நீக்கப்பட்டுள்ளது.

DIN

தலைநகர் தில்லியில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சியில் மேற்கு வங்கம், மகாராஷ்டிர மாநிலங்களைத் தொடர்ந்து பிகார் நீக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தன்று பிகார் மாநிலத்தின் சார்பில் இம்முறை ஜல்-ஜீவன்-ஹர்யாலி திட்டம் தொடர்பாக அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த அணிவகுப்பு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதன்மூலம் குடியரசு தின அணிவகுப்பில் பிகார் மாநிலத்தின் பிரதிநிதித்துவம் இடம்பெறாதது உறுதியாகியுள்ளது.

அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க தேவையான அனைத்து வழிமுறைகளும் முழுமையாக பின்பற்றப்படாத காரணத்தால் பிகாரின் இந்த முன்னெடுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

பசுமையான நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கும் விதமாக ஜல்-ஜீவன்-ஹர்யாலி திட்டம் 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தொடங்கி வைத்தார். 

ஏற்கனவே மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை நிராகரித்தது, இந்த திட்டம் தொடர்பாக பிகார் அரசின் அணிவகுப்பு முன்னெடுப்புக்கு அனுமதி மறுத்ததன் மூலம் மத்திய அரசு பிகார் மாநிலத்தை அவமதித்து விட்டதாக ராஷ்டிரிய ஜனதா தளம் விமர்சித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

SCROLL FOR NEXT