முகப்பு
இந்தியா

தந்தையின் நினைவுதினத்தை முன்னிட்டு 9 சிறைக் கைதிகளுக்கு விடுதலை வழங்கிய உயர்ந்த மனிதர்

ஆக்ரா சிறையில் இருந்து 9 சிறைக் கைதிகள் விடுதலையாகி சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றனர். காரணம், அவர்களுக்கு முன்னெப்போதுமே தெரியாத ஒரு உயர்ந்த உள்ளத்தால்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:20 PM
பகிர்:

ஆக்ரா: ஆக்ரா சிறையில் இருந்து 9 சிறைக் கைதிகள் விடுதலையாகி சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றனர். காரணம், அவர்களுக்கு முன்னெப்போதுமே தெரியாத ஒரு உயர்ந்த உள்ளத்தால்.

சிறையில் இருந்து விடுதலையான இந்த 9 பேரும் செய்த சிறுசிறு குற்றங்களுக்காக, தங்களது தண்டனைக் காலத்தை நிறைவு செய்துவிட்ட போதிலும், அபராதத் தொகையை செலுத்த வழியில்லாமல் சிறையிலேயே காலம்கழித்து வந்தனர்.

சமூக சேவகரான பிரவேந்திர குமார் யாதவ் இவர்கள் அனைவரும் செலுத்த வேண்டிய அபராதத் தொகையான ரூ.61,333ஐ செலுத்தி, இவர்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்துள்ளார்.

எனது தந்தையின் 6வது நினைவு தினத்தை முன்னிட்டு இந்த 9 சிறைக் கைதிகளுக்கும் விடுதலை பெற்றுத் தர நான் விரும்பினேன். அதை செய்துவிட்டேன் என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.