ராகுல் காந்தி ஒரு ஓரினச் சேர்க்கையாளர்: அதிர வைத்த அகில பாரத ஹிந்து மகாசபா தலைவர்
ராகுல் காந்தி ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்ற அகில பாரத ஹிந்து மகாசபா தலைவர் ஸ்வாமி சக்ரபாணியின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புது தில்லி: ராகுல் காந்தி ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்ற அகில பாரத ஹிந்து மகாசபா தலைவர் ஸ்வாமி சக்ரபாணியின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் சேவா தளத்தின் சார்பில் அதன் தொண்டர்களுக்கு பத்து நாள் பயிற்சி முகாம் ஒன்று தில்லியில் நடைபெற்றது. வியாழனன்று நடைபெற்ற அதன் நிறைவு நாள் விழாவில் பங்கேற்ற தொண்டர்களுக்கு கையேடு ஒன்று வழங்கப்பட்டது.
அந்தக் கையேட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வீர் சாவர்க்கர் மற்றும் காந்தியை சுட்டுக் கொலை செய்த நாதுராம் விநாயக் கோட்ஸே இருவருக்குமிடையே உடல் ரீதியிலான தொடர்பு இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன் தனது 12 வயதிலேயே சாவர்க்கர் மசூதிகளின் மேல் கல்லெறிந்து போராட்டம் செய்தார் என்றும், தனது ஆதரவாளர்கள் அனைவரும் சிறுபான்மையின பெண்களைக் கற்பழிக்கலாம் என்று கூறினார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பாஜக மற்றும் அதன் சார்பு அமைப்புகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர்கள் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராகுல் காந்தி ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்ற அகில பாரத ஹிந்து மகாசபா தலைவர் ஸ்வாமி சக்ரபாணியின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், 'அந்தக் கையேட்டில் சாவர்க்கார் அவர்களைக் குறித்து கேலிக்குரிய குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளன. அதுபோலவே ராகுல் காந்தி ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்று நாங்கள் கேள்விப்படுகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விளக்கமளித்த காங்கிரஸ் சேவா தள தலைவர் லால்ஜி தேசாய், 'அந்தக் கையேட்டை எழுதியவர் ஆதாரத்தின் அடிப்படையிலேயே எழுதியுள்ளார். லாரி காலின்ஸ் மற்றும் டொமினிக் லேப்பியர் இருவரும் எழுதியுள்ள "ப்ரீடம் அட் மிட்நைட்" என்ற புத்தகத்தின் 423 -ஆவது பக்கத்தில் இதுதொடர்பான செய்திகள் உள்ளது'' என்று விளக்கமளித்துள்ளார்.