முகப்பு
இந்தியா

நீங்கள் திருமணத்தை திட்டமிட்டபடி நடத்துங்கள்: தவித்த குடும்பத்தார்க்கு குடியரசுத் தலைவரின் ஆச்சர்ய பரிசு

தனது வருகையால் திட்டமிட்டபடி தங்களது வீட்டுத் திருமணத்தை நடத்த இயலாமல் தவித்த குடும்பத்தார்க்கு.  குடியரசுத் கலைவர் ஆச்சர்ய பரிசு அழைத்துள்ளார்.

Updated On : 6 ஜனவரி, 2020 at 7:09 PM
ராம்நாத் கோவிந்த்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 8:53 PM

கொச்சி: தனது வருகையால் திட்டமிட்டபடி தங்களது வீட்டுத் திருமணத்தை நடத்த இயலாமல் தவித்த குடும்பத்தார்க்கு.  குடியரசுத் கலைவர் ஆச்சர்ய பரிசு அழைத்துள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தற்போது கேரள மாநிலம் கொச்சியில் தங்கியுள்ளார். அவர் தனது பயணத்தின் அடுத்த கட்டமாக  செவ்வாயன்று லட்சத் தீவுகளுக்கு செல்ல உள்ளார். கொச்சியின் அவர் தாஜ் விவாண்டா என்னும் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார். பொதுவாக குடியரசுத் தலைவர் செல்லும் இடங்களில் உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பது இயல்பாகும்.

அவர் தங்கியுள்ள தாஜ் விவாண்டா விடுதியில் திங்களன்று ஒரு திருமணம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கெடுபிடிகளின் காரணமாக திருமணத்தை வேறு ஒரு  இடத்திற்குமாற்றி விடலாம் என்று அந்தக் குடும்பத்தார் திட்டமிட்டனர்.

Advertisement

இந்த சமயத்தில் அந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டில் இருந்து வந்திருந்த ஆஷ்லி ஹால் என்னும் பெண் தகவல் அறிந்தவுடன் இதுதொடர்பாக உதவுமாறு குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்தார். இதை அறிந்த ராம்நாத் கோவிந்த் தாராளமாக திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்தார். செய்வதறியாது தவித்து வந்த திருமண வீட்டாருக்கு இது எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாகி அமைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.