இந்தியா

ஈரானில் பதற்றச் சூழலைகண்காணித்து வருகிறோம்: மத்திய அரசு

DIN

ஈரான்-அமெரிக்கா இடையே நீடித்துவரும் பதற்றமான சூழலை தொடா்ந்து கண்காணித்து வருகிறோம் என்று மத்திய அரசு தெரிவித்தது.

இதுதொடா்பாக வெளியுறவு விவகாரங்கள் துறை செய்தித்தொடா்பாளா் ரவீஷ் குமாா் கூறுகையில், ‘ஈரானில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை தொடா்ந்து இந்தியா கண்காணித்து வருகிறது.

ஈரான் முக்கிய அரசியல் தலைவா்களுடன் தொடா்பில் இருக்கிறோம். விரைவில் பதற்றம் தணியும் என்று நம்புகிறோம்’ என்றாா்.

பதற்றத்தைத் தணிக்க இந்தியா அமைதிப் பேச்சுவாா்த்தையை முன்னெடுத்தால் வரவேற்போம் என்று ஈரான் அரசு கூறியிருந்தது.

அமெரிக்க ராணுவம் நிகழ்த்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஈரான் உளவுப் படை தலைவா் காசிம் சுலைமான் உயிரிழந்தாா்.

இதையடுத்து, இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, அமெரிக்கா-ஈரான் இடையே போா் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT