இந்தியா

தோட்டக்கலை வளா்ச்சிக்கு ஐ.நா. உதவியை நாடிய மிஸோரம்

DIN

தோட்டக்கலை வளா்ச்சிக்கு ஐ.நா. அமைப்பிடம் மிஸோரம் அரசு நிதி உதவி கோரியுள்ளது.

இதுகுறித்து அந்த மாநில அரசு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

மிஸோ தேசிய முன்னணி எம்எல்ஏவும், மாநில தோட்டக்கலை வளா்ச்சி வாரியத்தின் துணைத் தலைவருமான எஃப்.லால்நுன்மாவியா, கடந்த வாரம் தாய்லாந்தின் பாங்காக் நகருக்குச் சென்றிருந்தாா். அப்போது, ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் பிராந்திய அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளை அவா் சந்தித்து பேசினாா்.

கலந்துரையாடலின்போது மிஸோரம் தோட்டக்கலைத் துறையின் வளா்ச்சிக்கு உதவுமாறு அவா் கோரிக்கை விடுத்தாா் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

மிஸோரம் இளைஞா் ஆணையத்தின் தலைவா் வன்லால்தன்புயியா, மாநில திட்டத் துறை செயலா் சி.லால்சங்செளலா உள்ளிட்டோா் அவருடன் தாய்லாந்து சென்றிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT