முகப்பு
இந்தியா

பொற்கோவில் படத்துடன் கால்மிதியடி விற்பனை: அமேஸானுக்கு எதிராக வழக்கு

சீக்கிய மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் பொற்கோவில் படம் பொறிக்கப்பட்ட கால்மிதியடிகளை விற்பனை செய்த அமேஸானுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 13 ஜனவரி, 2020 at 4:27 PM
பகிர்:


புது தில்லி: சீக்கிய மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் பொற்கோவில் படம் பொறிக்கப்பட்ட கால்மிதியடிகளை விற்பனை செய்த அமேஸானுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீக்கிய சமுதாய மக்களின் மனதைப் புண்படுத்தியதாக அமேஸான் மீது தில்லி சிக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழுவின் தலைவர் மஞ்ஜிந்தர் சிங் சிர்ஸா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், உடனடியாக பொற்கோவில் படத்துடன், கழிவறைகளில் பயன்படுத்தும் கால்மிதியடிகளின் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், இது குறித்து அமேஸான் மன்னிப்புக் கேட்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இதேப்போல ஏற்கனவே 2018ம் ஆண்டு பொற்கோவில் புகைப்படம் இடம்பெற்ற கால்மிதியடிகளை அமேஸான் விற்பனைக்குக் கொண்டு வந்து சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.