இந்தியா

சி.ஏ.ஏ.வுக்கு எதிர்ப்பு: அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏக்கள் போராட்டம்

DIN


குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அஸ்ஸாம் மாநிலத்தில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி எம்.எல்.ஏக்கள் சிறப்பு சட்டப்பேரவையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. ஒரு சில பகுதிகளில் போராட்டம் வன்முறையாக வெடித்ததில் உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. தற்போதும் ஒரு சில இடங்களில் இச்சட்டத்திற்கு எதிராக போராட்டம் தொடர்ந்து வருகிறது.  

இந்த சூழ்நிலையில் இன்று, அஸ்ஸாம் சட்டப்பேரவைக்கு வெளியே ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சியின் தலைவர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், மத்திய அரசுக்கு எதிரான வாசகங்களுடன் கூடிய பதாகைகளை வைத்திருந்தனர்.

2019 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட எஸ்சி / எஸ்டி இட ஒதுக்கீட்டை நீட்டிக்க அஸ்ஸாம் சட்டப்பேரவையின் சிறப்பு அமர்வு இன்று கூடியுள்ளது. இந்த சமயத்தில் அரசின் கவனத்தை ஈர்க்க ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரும் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம்.. சர்ச்சையில் பாஜக!

சிரிப்பே துணை!

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

SCROLL FOR NEXT