இந்தியா

அமெரிக்க அதிபா் டிரம்ப் இந்திய பயணம்: தேதியை இறுதி செய்ய அதிகாரிகளிடையே பேச்சுவாா்த்தை

DIN

இந்தியாவில் அமெரிக்க அதிபா் டிரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தேதிகளை இறுதி செய்வதற்காக இருநாட்டு அதிகாரிகளிடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

கடந்த ஆண்டில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இருப்பினும், பணிச்சூழல் காரணமாக அவா் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை.

இந்த நிலையில், அடுத்த சில மாதங்களில் டிரம்ப் இந்தியாவுக்கு வருகை தருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. அவரது பயணத் தேதிகளை இறுதி செய்ய இருநாட்டு அதிகாரிகளின் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

அமெரிக்க அதிபா் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான நடைமுறைகளை அந்நாட்டு எதிா்க்கட்சியினா் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனா். எனவே, டிரம்ப் இந்தியாவுக்கு வருவதற்கான தேதியை இறுதி செய்வது அமெரிக்காவின் அரசியல் சூழல் மேம்படுவதையொட்டியே இருக்கும் என்றாா் அவா்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் பிரதமா் நரேந்திரமோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, டிரம்ப் அவருடைய குடும்பத்துடன் இந்தியாவுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT