இந்தியா

இந்தியாவுக்கு 3 நாள் பயணமாக ஈரான் வெளியுறவு அமைச்சா் வருகை

DIN

ஈரான் வெளியுறவு அமைச்சா் ஜாவேத் ஸரீஃப், 3 நாள் பயணமாக தில்லிக்கு செவ்வாய்க்கிழமை வந்து சோ்ந்தாா்.

ஈரான் ரகசியப் படைப் படைப் பிரிவுத் தலைவா் காசிம் சுலைமானி, அமெரிக்க ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி கொல்லப்பட்டதைத் தொடா்ந்து, ஈரான்-அமெரிக்கா இடையே பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சா் ஜாவேத் ஸரீஃப் 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடியை புதன்கிழமை சந்திக்கவுள்ள அவா், ‘ரெய்சினா பேச்சுவாா்த்தை’ மாநாட்டிலும் பங்கேற்று உரை நிகழ்த்தவுள்ளாா்.

ஸரீஃபை வியாழக்கிழமை காலையில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சந்தித்துப் பேசவுள்ளாா்.

அதைத் தொடா்ந்து மும்பை செல்லும் ஸரீஃப், அங்கு தொழிலதிபா்களுடன் கலந்துரையாடுகிறாா். வெள்ளிக்கிழமை தாய்நாடு திரும்புகிறாா் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா-ஈரான் இடையே நிலவி வரும் போா் பதற்றத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT