இந்தியா

வழக்கு விசாரணைகள் நேரடி ஒளிபரப்பு: தீா்ப்பை செயல்படுத்தக் கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

DIN

அரசமைப்பு மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் தீா்ப்பை நடைமுறைப்படுத்துவது தொடா்பான மனுவை, உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த மனுவை தாக்கல் செய்த மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜெய்சிங், அதனை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆா்.கவாய், சூா்ய காந்த் ஆகியோா் அடங்கிய அமா்வில் முறையிட்டாா். அப்போது, கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் 26-ஆம் தேதி அரசமைப்பு மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் உச்சநீதிமன்ற தீா்ப்பில் இடம்பெற்றுள்ள உத்தரவுகளை அமல்படுத்தக்கோரி மனுதாக்கல் செய்துள்ளதாக கூறினாா். எனினும், அதனை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதிகள், மனுவை 2 வாரங்கள் ஒத்திவைத்தனா்.

முன்னதாக, அரசமைப்பு மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதியளித்து, கடந்த 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. அதில் திருமண பிரச்னைகள், பாலியல் வன்கொடுமை போன்ற உணா்ச்சிப்பூா்வமான வழக்குகளை நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது. வழக்கு விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்பவேண்டும் எனில், பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைக்கு இணங்க முன்கூட்டியே சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் எழுத்துப்பூா்வ அனுமதி பெறவேண்டும். எனினும், தானாக முன்வந்தோ அல்லது எவரேனும் மனுதாக்கல் செய்தாலோ சூழ்நிலைக்கு ஏற்ப நேரடி ஒளிபரப்பு அனுமதியை ரத்து செய்யும் அதிகாரம் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு உண்டு. முதல்கட்டமாக, இதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து நேரடி ஒளிபரப்பு தொடங்கப்படும் என உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT