இந்தியா

இதுதான் காற்றின் தரம்! 

IANS

செவ்வாய்க்கிழமை காலை அடர்த்தியான மூடுபனியில் தில்லி மூழ்கியிருந்தது.  குறைந்தபட்ச வெப்பநிலை 8.3 டிகிரி செல்சியஸாக பதிவாகி உள்ளது.

இது மற்றுமொரு குளிர் நாள் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது. அதிகபட்சம் 16.1 டிகிரி செல்சியஸாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

"இன்று பரவலாக லேசான மழை அல்லது தூறலுடன் மேகமூட்டமாக இருக்கும்" என்று வானிலை மைய அதிகாரிகள் கூறினர். இமாச்சல பிரதேசத்தில் பனிப்பொழிவு இருப்பதால், தில்லி பனி சூழந்துள்ளது. குளிர்ந்த காற்றுடன் வெப்பநிலை மேலும் குறைக்கக்கூடும்’ என்று ஐஎம்டி எச்சரித்தது.

இந்த மையம் நடத்தும் காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு அமைப்பு (சாஃபர்) அறிக்கையின்படி, தில்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு (AQI) செவ்வாயன்று 322 என்ற 'மிக மோசமான' பிரிவின் கீழ் வந்தது.

"உயரமான பகுதியில் காற்றின் தரம் அடுத்த இரண்டு நாட்களுக்கு குறைவாக,   இருக்க வாய்ப்புள்ளது, மேலும் அடர்த்தியான மூடுபனி வரக்கூடும்" என்று சாஃபர் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT