முகப்பு
இந்தியா

காஷ்மீர்: என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் புல்வாமா பகுதியில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

காஷ்மீர் புல்வாமா பகுதியில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. தாக்குதல் நடந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும், இந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர் மற்றும் காஷ்மீர் போலீசார் ஒருவர் உயிரிழந்ததாகவும், இரு வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →