கோப்புப் படம் 
இந்தியா

பள்ளிப் பேருந்து விபத்தில் 6 குழந்தைகள் காயமடைந்தனர்

தில்லியிலுள்ள நாராயணா பகுதியில் கிளஸ்டர் பஸ் மீது வியாழக்கிழமை பள்ளி பேருந்து மோதியதில் 6 மாணவர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

DIN

தில்லியிலுள்ள நாராயணா பகுதியில் கிளஸ்டர் பஸ் மீது வியாழக்கிழமை பள்ளி பேருந்து மோதியதில் 6 மாணவர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தில்லி தீயணைப்பு சேவை (டி.எஃப்.எஸ்) அளித்த தகவலின்படி, வியாழக்கிழமை காலை 7.10 மணிக்கு இந்த விபத்து தொடர்பாக அழைப்பு வந்தது. 

காயமடைந்த மாணவர்கள் பொதுமக்களின் உதவியுடன் கபூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

இது குறித்து டிஎஃப்எஸ் தலைவர் அதுல் கார்க் கூறியது,  "தீயணைப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள நாராயணா பகுதியில் ஒரு பள்ளி பஸ்ஸும் கிளஸ்டர் பஸ்ஸஸும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு நிலையத்துக்கு அழைப்பு வந்தது. சுமார் ஆறு பள்ளி குழந்தைகள் காயமடைந்துள்ளனர். மேலும் விவரங்கள் பிறகு தெரிவிக்கப்படும்" என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தினம் தினம் திருநாளே!

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

முகமது சின்வார் கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்ட ஹமாஸ்!

வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!

உலக தடகள சாம்பியன்ஷிப்: 19 பேருடன் இந்திய அணி

SCROLL FOR NEXT