குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் குறித்து ஆலோசனை: சத்தீஸ்கர் முதல்வர்
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வருவது குறித்து அமைச்சரவையில் ஆலோசிக்க உள்ளதாக சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பாஹெல் தெரிவித்துள்ளார்.
புது தில்லி: குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வருவது குறித்து அமைச்சரவையில் ஆலோசிக்க உள்ளதாக சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பாஹெல் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த சத்தீஸ்கர் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று சாதனை புரிந்தது. இதற்காக மாநில காங்கிரஸ் குழுவை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வருவது குறித்து அமைச்சரவையில் ஆலோசிக்க உள்ளதாக சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பாஹெல் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பாஹெல், அவரது அமைச்சரவை சகாக்களுடன் தில்லியில் சோனியா மற்றும் ராகுல் காந்தியை வெள்ளியன்று சந்தித்துப் பேசினார். சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, வேலைவாய்ப்பின்மை அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஒரு திசை திருப்பும் கருவியாகவே பாஜக பயன்படுத்துகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வருவது குறித்து அமைச்சரவையில் ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.