கரோனா வைரஸ்: கேரளத்தில் 436 பேர் கண்காணிப்பு
சீனாவில் இருந்து கேரளா திரும்பியுள்ள 436 பேரிடம் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சீனாவில் இருந்து கேரளா திரும்பியுள்ள 436 பேரிடம் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதில் 5 பேர் மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக இதுவரை 106 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டும் 2,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து கேரளா திரும்பியுள்ள 436 பேருக்கு மருத்துவ சிகிச்சை நடத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் யாரும் கரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக பாதிக்கப்படவில்லை.
5 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர். மற்றவர்கள் வீடு திரும்பியுள்ளதாகவும், அங்கு அவர்களை தனிமைப்படுத்தி இருக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.