இந்தியா

ரஷியாவிடமிருந்து 33 போர் விமானங்கள் வாங்க ஒப்புதல்: பாதுகாப்புத் துறை அமைச்சகம்

DIN


ரஷியாவிடமிருந்து ரூ. 18,148 கோடிக்கு 33 புதிய போர் விமானங்களை வாங்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் இன்று (வியாழக்கிழமை) ஒப்புதல் அளித்தது.

இதுபற்றி பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்ததாவது:

"12 சுகோய்-30 எம்கேஐ மற்றும் 21 மிக்-29எஸ் என 33 புதிய போர் விமானங்களை வாங்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மொத்த மதிப்பீடு ரூ. 18,148 கோடி."

கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15-16 ஆகிய தேதிகளில் இந்தியா, சீனா ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீனத் தரப்பில் படுகாயமடைந்தவர்கள் உள்பட 43 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, சீனக் கட்டுப்பாட்டிலிருந்த இந்திய வீரர்கள் 10 பேர் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து இருநாட்டு உறவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT