ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் நிலநடுக்கம்!
ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் வெள்ளி இரவு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது
புது தில்லி: ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் வெள்ளி இரவு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
ஹரியாணா குருகிராம் மாவட்டத்தில் வெள்ளி இரவு 7 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையமானது குருகிராமிலிருந்து தெற்கே 60 கிமீ தொலைவில் இருந்துள்ளது. அண்டை மாநிலமான தில்லியிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரபட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
அதேபோல் ராஜஸ்தான மாநிலம் ஆல்வாரிலும் இதேநேரத்திற்கு ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவான நிலநடுக்கமானது உணரப்பட்டுள்ளது. இதன் மையமானது ஆல்வாரில் இருந்து 35 கிமீ தென்மேற்கே இருந்துள்ளது.
இரண்டிலும் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து உடனே தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை,