முகப்பு
இந்தியா

ஆந்திரத்தில் புதிதாக 765 பேருக்கு கரோனா தொற்று

ஆந்திரத்தில் மேலும் 765 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்தை நெருங்குவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
corona test
பகிர்:

ஆந்திரத்தில் மேலும் 765 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்தை நெருங்குவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

சனிக்கிழமை நிலவரப்படி புதிதாகப் பாதிக்கப்பட்ட 765 பேரில், வெளி மாநிலத்தைச் சேர்ந்த 32 பேருக்கும், வெளி நாடுகளிலிருந்து வந்த 6 பேருக்கும் தொற்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். இதனால், மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கை 218 ஆக உயர்ந்துள்ளது.

ஆந்திரத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,699 ஆக உள்ளது. இதில் 9,473 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 8,008 பேர் குணமடைந்துள்ளனர்.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.