முகப்பு
இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் அமைச்சர், அவரது மனைவிக்கு கரோனா பாதிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ராஜேந்திர பிரதாப் சிங் மற்றும் அவரது மனைவிக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
madurai corona test
பகிர்:

உத்தரப்பிரதேச மாநிலம் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ராஜேந்திர பிரதாப் சிங் மற்றும் அவரது மனைவிக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்த போது, நான் நலமாக இருக்கிறேன், வெள்ளிக்கிழமைதான் மருத்துவமனைக்கு வந்தேன். மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறேன் என்று பிடிஐ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பிரதாப்கார் மாவட்டம் பட்டி பேரவைத் தொகுதியில் இருந்து பிரதாப் ங் நான்கு முறை எம்எல்ஏவாக ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.