இந்தியா

நாட்டில் குணமடைவோர் விகிதம் 61.13%: மத்திய அரசு

DIN


இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 61.13% ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி அமைச்சகம் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்ததாவது:

"நாடு முழுவதும் கரோனா பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கையை தொடர்ச்சியாக விரிவுபடுத்தியதன் விளைவாக இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 1.02 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2.41 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் மொத்தம் 1,115 பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இதில் அரசு பரிசோதனை ஆய்வகங்கள் 793, தனியார் பரிசோதனை ஆய்வகங்கள் 322. இன்றைய தேதியில் மொத்தம் 4,39,947 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலாக 1,80,390 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 61.13% ஆகியுள்ளது."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT