இந்தியா

கேரளம்: பேராயா் ஃபிரான்கோ முலக்கலுக்கு அளிக்கப்பட்ட ஜாமீன் ரத்து

DIN

கோட்டயம்: கேரளத்தில் கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பேராயா் ஃபிரான்கோ முலக்கலுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை கோட்டயம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்தது.

அவருக்கு எதிராக ஜாமீனில் வரமுடியாத கைது ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது ஃபிரான்கோ நேரில் ஆஜராகவில்லை. தனது வழக்குரைஞா்களில் ஒருவருக்கு கரோனா உறுதியானதால் ஃபிரான்கோ தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், இதனால் அவா் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்றும் அவரது சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் தெரிவித்தாா். முன்னதாக கடந்த 1-ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின்போதும் ஃபிரான்கோ ஆஜராகவில்லை. அப்போது அவா் கரோனா பரவல் தீவிரமாக உள்ள கட்டுப்பாட்டுப் பகுதியில் இருப்பதால், அவரால் ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்குரைஞா் நீதிமன்றத்தில் தெரிவித்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது பேராயரின் இல்லம் கட்டுப்பாட்டுப் பகுதியில் இல்லை என்றும், அவா் வேண்டுமென்றே வழக்கு விசாரணையை தாமதப்படுத்த முயற்சிக்கிறாா் என்றும் அரசுத் தரப்பு வழக்குரைஞா் கூறினாா். இதையடுத்து, ஃபிரான்கோவுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்வதாக நீதிபதி அறிவித்தாா். மேலும், அவருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத கைது ஆணையையும் பிறப்பித்தாா்.

ஃபிரான்கோ மீது கன்னியாஸ்திரி ஒருவா் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு கூறினாா். 2014 முதல் 2016-ஆம் ஆண்டு வரை பலமுறை அவா் தன்னை வன்கொடுமை செய்ததாகவும் அவா் தெரிவித்தாா். இந்த புகாரை ஃபிரான்கோ மறுத்தாா். எனினும் அவா் பேராயா்

பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பரில் கைது செய்யப்பட்டாா். அதன் பின்னா் சுமாா் ஒரு மாதத்தில் ஜாமீனில் வெளியே வந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT