முகப்பு
இந்தியா

கரோனாவுக்கு பலியாகும் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை: மம்தா பானர்ஜி

கரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு மரணம் அடையும் அரசு ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:56 PM
கரோனாவுக்கு பலியாகும் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை: மம்தா பானர்ஜி
பகிர்:


கொல்கத்தா: கரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு மரணம் அடையும் அரசு ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இதுவரை மேற்கு வங்கத்தில் கரோனா பாதித்து 12 அரசு ஊழியர்கள் பலியாகியுள்ளனர் என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.

கரோனாவுக்கு எதிரான போரில் முன்னின்று போரிட்டு உயிரிழந்த அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர், மருத்துவ ஊழியர்கள் அனைவரின் பணியை மேற்கு வங்க அரசு விருது மற்றும் சான்றிதழ்கள் அளித்து கௌரவிக்கும் என்றும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.