இந்தியா

ஆந்திரத்தை அச்சுறுத்தும் கரோனா: ஒரு நாள் பாதிப்பு 2500-ஐக் கடந்தது

DIN


ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டு வருகிறது. முதல் முறையாக நேற்று இரண்டாயிரத்தை கடந்த நிலையில் இன்று 2500-ஐக் கடந்துவிட்டது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 2,593 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 2,593 பேருக்கு (9 பேர் இதர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்)  கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 38 ஆயிரத்தை எட்டிவிட்டது.

மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு கரோனா பாதித்து 40 பேர் பலியாகியுள்ளதை அடுத்து ஆந்திரத்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 492 ஆக உயர்ந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு நாள்தோறும் ஆயிரத்தைக் கடந்துவந்த நிலையில், நேற்று சுமார் இரண்டாயிரத்தை எட்டியது. இதையடுத்து அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 38,044 ஆக உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT