அஸ்ஸாம் சிறப்பு மையத்தில் இருந்து வெளியேறிய கரோனா நோயாளிகள்: உணவு, குடிநீர் கேட்டு போராட்டம்
அஸ்ஸாம் மாநிலத்தின் கம்ரப் மாவட்டத்தில் உள்ள கரோனா சிறப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள், அங்கிருந்து வெளியேறி உணவு, குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈ
குவகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தின் கம்ரப் மாவட்டத்தில் உள்ள கரோனா சிறப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள், அங்கிருந்து வெளியேறி உணவு, குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வியாழக்கிழமை இரவில் கரோனா மையத்தில் இருந்து வெளியேறி, தேசிய நெடுஞ்சாலை 31-ஐ மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கரோனா நோயாளிகளிடம் கம்ரப் துணை ஆணையர் கைலாஷ் கார்த்திக் தலைமையில் காவல்துறையினர் விரைந்து வந்து நோயாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்டோர் ஒரே அறையில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், போதுமான உணவு மற்றும் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும் நோயாளிகள் குற்றம்சாட்டினர்.
அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்து, பேச்சுவார்த்தையின் பயனாக நோயாளிகள் கரோனா மையத்துக்கு மீண்டும் திரும்பினர்.