முகப்பு
இந்தியா

மாநிலங்களவைக்குப் புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் 22-ல் பதவியேற்பு

மாநிலங்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் ஜூலை 22-ம் தேதி பதவியேற்றுக் கொள்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:57 PM
மாநிலங்களவைக்குப் புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் 22-ல் பதவியேற்பு
பகிர்:


புது தில்லி: மாநிலங்களவைக்கு புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் ஜூலை 22-ம் தேதி பதவியேற்றுக் கொள்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில் 20 மாநிலங்களில் இருந்து 61 பேர் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் 22ம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ளனர். புதிதாக மற்றும் மீண்டும் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் உறுப்பினர்கள் கே. கேஷவ ராவ் மற்றும் திருச்சி சிவா ஆகியோர் நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் என்பதால், விரைவாக இவர்கள் பதவியேற்க வேண்டும் என்பதால் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு பதவியேற்பு நிகழ்ச்சி குறித்து முடிவு செய்துள்ளார்.

பதவியேற்பு நிகழ்ச்சி குறித்து மாநிலங்களவை பொதுச் செயலாளர் புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அறிவிப்பார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.