இந்தியா

ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவராக ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா நியமனம்

DIN

இந்தியாவின் பணக்கார பெண்ணான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக, அந்நிறுவனத்தின் தலைவராக இருந்த ஷிவ் நாடார் பதவி விலகிய நிலையில் அவரது மகள் ரோஷ்னி நாடார் பொறுப்பேற்கிறார். அதே நேரத்தில் ஷிவ் நாடார்  நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், தலைமை வியூக அதிகாரியாகவும் தொடருவார் என்று நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

38 வயதான ரோஷ்னி மல்ஹோத்ரா, முன்னதாக ஹெச்.சி.எல். கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநராகவும், தொழில்நுட்ப வாரியத்தின் துணைத் தலைவராகவும், சிவன் நாடார் அறக்கட்டளையின் அறங்காவலராகவும் இருந்தார். தற்போது நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்த்தப்பட்டுள்ளார். 

ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள 'உலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள்' பட்டியலில் 2017 முதல் 2019 வரை இடம்பெற்றுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT