ஆந்திரத்தில் ஒரே நாளில் சுமார் 4 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு
ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 4 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அந்த மாநிலத்தில் பெரும்
ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 4 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அந்த மாநிலத்தில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 3,963 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநிலத்தின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் 3,963 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 44 ஆயிரத்தை எட்டிவிட்டது.
மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு கரோனா பாதித்து 52 பேர் பலியாகியுள்ளதை அடுத்து ஆந்திரத்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 586 ஆக உயர்ந்துள்ளது.
இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில வெளி மாநிலம், வெளி நாட்டைச் சேர்ந்த யாருக்கும் கரோனா பதிவாகவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 23,872 மாதிரிகள் சோதிக்கப்பட்டதில், புதிதாக 3,963 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 18 சதவீதமாகும். இதில் கிழக்கு கோதாவரியில் மட்டும் சுமார் 1000 பேருக்கு இன்று கரோனா உறுதியாகியுள்ளது.
அதே சமயம் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,411 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலத்தில் தற்போது 22,260 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 21 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.