முகப்பு
இந்தியா

கரோனா சிகிச்சைக்கு ரூ.27 லட்சம் அளவுக்கு கட்டணக் கொள்ளை: தாணே நகராட்சி தணிக்கையில் தகவல்

சுமார் 27 லட்ச ரூபாய் அளவுக்கு நோயாளிகளிடம் வசூலித்தத் தொகையை திரும்ப வழங்குமாறு மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:57 PM
தாணே: கரோனா சிகிச்சைக்கு கட்டணக் கொள்ளையில் ஈடுபட்ட தனியார் மருத்துவமனைகள்
பகிர்:

தாணே: கரோனா சிகிச்சை அளித்த மருத்துவமனைகள் நோயாளிகளிடம் இருந்து வசூலித்த கட்டண ரசீதுகளை தணிக்கை செய்த தாணே நகராட்சி நிர்வாகம், சுமார் 27 லட்ச ரூபாய் அளவுக்கு நோயாளிகளிடம் வசூலித்தத் தொகையை திரும்ப வழங்குமாறு மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகள் அளித்த 1,752 கட்டண ரசீதுகளை தணிக்கை செய்ததில், 196 நோயாளிகளுக்கு, தனியார் மருத்துவமனைகள் மோசடியான கட்டணத்தை வசூலித்திருப்பது தெரிய வந்திருப்பதாகவும், தொடர்ந்து தனியார் மருத்துவமனை கட்டண ரசீதுகள் தணிக்கை செய்யப்படும் என்றும் நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதாவது, தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளிடம் இருந்து போலியான கட்டணங்கள் அல்லது அதிகப்படியான கட்டணத்தை நிர்ணயித்திருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. 

அந்தக் கட்டணத்தை நோயாளிகளிடம் திரும்ப அளிக்குமாறும் தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.