இந்தியா

கரோனாவுக்கு எதிராக பிகார் அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை: காங்கிரஸ் எம்பி அகிலேஷ் பிரசாத்

DIN

கரோனாவுக்கு எதிராக பிகார் அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என் காங்கிரஸ் மாநிலங்களை உறுப்பினர் அகிலேஷ் பிரசாத் சிங் தெரிவித்துள்ளார். 

பிகாரில் கடந்த சில தினங்களாக கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறார். அங்கு இன்று மட்டும் 1412 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து மாநிலத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,379ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 16,597 பேர் குணமடைந்தனர். மேலும் 9,602 பேர் தற்போதைய நிலவரப்படி சிகிச்சையில் உள்ளனர்.

இதுறித்து காங்கிரஸ் எம்பி அகிலேஷ் பிரசாத் கூறியதாவது, கரோனாவுக்கு எதிராக போராட அரசு எதுவும் செய்யவில்லை. பிகார் மக்கள் முற்றிலும் கடவுளை நம்பிதான் இருக்கிறார்கள். வரும் நாள்களில் பிகாரில் கரோனாவுக்கு அதிகமான மக்கள் இறக்க நேரிடலாம். தொற்று பரவுகிறது என்றாலும் பிகாரில் இன்னும் குறைவான சோதனைகளே மேற்கொள்ளப்படுகின்றன. 10 கோடிக்கும் அதிகமான மக்கள் மாநிலத்தில் வாழ்கின்றனர். 

உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், பிகாரில் 20 சதவீத சோதனை மட்டுமே நடத்தப்படுகிறது. "நிதீஷ் குமார் எதையும் செய்ய விரும்பவில்லை. ஆனால் அவர் எப்படியாவது ஆட்சியில் மட்டுமே நீடிக்க விரும்புகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT